வரலாற்றுச் சிறப்புமிக்க உலகத் தமிழாய்வு மாநாடு, கனடாவின் ரொறன்டோ நகரில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 15) விமரிசையாகத் ஆரம்பமானது.

அனைத்துலக தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 18-ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாடு, 1974-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டிற்குப் பிறகு, தமிழர்களை முதன்மையாகக் கொண்டு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்படும் பிரம்மாண்டமான நிகழ்வாகும்.

"செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் முதன்மைத் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சூழலில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் எவ்வாறு பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது குறித்து உலகளவில் 13-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 497 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தீவிர பரிசீலனைக்குச் பிறகு 105 கட்டுரைகள் குறுக்கப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாடுகளிலிருந்தும் பல கல்விமான்கள், புத்திஜீவிகள் பங்குபெறுகின்றனர். நோர்வேயிலிருந்து கஜேந்திரன் சாதனா, மகேஷன் சர்மி, முரளிதரன் கேஷினி, பரனிதரன் அஞ்சனா, பிரான்ஸிலிருந்து கொலின் ஜோசப், துருக்கியிலிருந்து டொக்டர் ஆஸிபா மொஹமட் அஸ்ரப் உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள் பங்கேற்கின்றனர்.

இலங்கையிலிருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன், செபராஜா அருள்ளப்பன், கோபாலப்பிள்ளை அமிர்த லிங்கம், ஷிவானி சண்முகதாஸ், சுகன்யா அரவிந்தன், ரவிஞ்சந்திரன் ஸ்வஸ்திகா, தம்போ மங்களேஸ்வரன், ஜெயகாந்தன் கிறிஸ்டி, கலாநிதி அருள் செல்வி கிருபை ராஜா, டில்ருக்ஷி ரவிச்சந்திரன், ஜெயப்பிரபா சுரேஷ், கிருஷ்ணபிள்ளை விசாகரூபன், பேராசிரியர் முத்துக்குமரன் சுகிர்தரன், பேரசாரியர் வண்ணமணி கோபாலசிங்கம், திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன்,
இந்தியாவிலிருந்து கோல் நியூமன் குமார், நவீன்குமார், நீலகண்ட சுப்பிரமணியப்பிள்ளை, கருணாநிதி கோபாலகிருஷ்ணன், அருள்சாமி சுவாமிநாதன், பெட்ரிக் ஞானப்பிரகாசம், தியாகராஜன் இராமகிருஷ்ணன், தங்கவேலு வசந்தகுமாரன், ஸ்ரீஹரி ரவீந்திரன், ஷிவானி நவீன், மகாதேவன் ராஜேந்திரன் பெருமாள் காளிராஜ், சிந்திவேல் ஆனந்த ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பிரிட்டனில் இருந்த ரிச்சட் அன்டனி, மரியநாயகம் சாம் பிரதீபன், பிரதீபன் பிரேமலதா, மலேஷியாவிலிருந்து ராஜேந்திரன் பெருமாள், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டின் கல்விச் சிறப்பையும் சர்வதேசத் தரத்தையும் உயர்த்தும் வகையில், இலங்கையின் த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியாப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று முக்கிய உயர்கல்வி நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படுகின்றன.
ஆய்வரங்குகளுடன் சேர்த்து, கனேடிய தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் பங்கேற்கும் தொடக்க விழாவுடன் மாநாடு இனிதே ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 'உலகத் தமிழ் உறவாடல் இரவு விருந்து', 700 பேர் வரை பங்கேற்கும் பிரம்மாண்டமான 'தமிழ் கலை இரவு' மற்றும் அனைத்துலக தமிழர் பேரவையின் 2-வது ஆண்டு நிறைவு விழா என பல சிறப்பம்சங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM