சவூதி மன்னருக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் நன்றி

15 Oct, 2026 | 05:38 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கி, அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளமைக்காக சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்க்கும் அந்நாட்டு உயர் நீதிமன்றத்துக்கும் இலங்கை மக்களின் சார்பில் இதயபூர்வமான நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதாக இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

சவூதி மன்னருக்கு வியாழக்கிழமை (15) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவூதி அரேபிய இராச்சியத்தில் தொழில்புரிந்து வந்த இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நீக்கி, அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளமை தொடர்பில் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு இலங்கை மக்களுடன் இணைந்து எனது இதயபூர்வமான வணக்கத்தையும் மதிப்புமிக்க நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தூரநோக்கின்றியும் கவனக்குறைவாகவும் வெளியிடப்பட்ட கருத்தொன்றின் காரணமாக இஸ்லாமிய மதத்துக்கும் அதன் இறைத்தூதர்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்நாட்டு உயர் நீதிமன்றம் அந்தத் தண்டனையை நீக்கி, அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த முதலாவது பௌத்த பிக்குவாகவும், சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்த ஒருவராகவும், இந்தத் தீர்மானத்தை நான் மிகுந்த நன்றியுணர்வுடன் வரவேற்கின்றேன். இலங்கை மக்களின் சார்பில் சவூதி அரேபிய மன்னருக்கும் அந்நாட்டு உயர் நீதிமன்றத்துக்கும் எனது இதயபூர்வமான நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு பௌத்தராகவும் இலங்கையராகவும், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி அவருக்கு விடுதலை வழங்குமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர், ஜப்பானிலுள்ள சவரா லங்கா விகாரையின் விகாராதிபதி, இந்தியாவிலுள்ள சாஞ்சி சேதியகிரி விகாரையின் விகாராதிபதி மற்றும் மாளிகாகந்தையிலுள்ள அக்கிரசாவக மகா விகாரையின் பொறுப்பாளர் என்ற வகையிலும் இந்த மனிதாபிமானக் கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.

அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நீக்கப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்தத் தீர்மானத்துக்காக சவூதி அரேபிய மன்னருக்கும் அந்நாட்டு உயர் நீதிமன்றத்துக்கும் இலங்கை மக்களுடன் இணைந்து எனது இதயபூர்வமான நன்றியையும் கௌரவத்தையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன் என பானகல உபதிஸ்ஸ தேரர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையின் 54.5...

2026-11-06 18:14:39
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தடுக்க...

2026-11-06 14:07:16
news-image

அபிவிருத்திக்குப் பதிலாக அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்துள்ள அரசாங்கம்...

2026-11-06 17:45:28
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து...

2026-11-06 17:34:28
news-image

வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன?...

2026-11-06 16:04:39
news-image

கனமழையால் கொழும்பில் ரயில் சேவைகள் தாமதம்;...

2026-11-06 19:13:56
news-image

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக்குவதற்கு முன்...

2026-11-06 16:35:20
news-image

கம்பஹா நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல...

2026-11-06 18:28:29
news-image

கம்பஹா நீதவானின் இடமாற்றம் : அரசாங்கம்...

2026-11-06 18:08:45
news-image

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவிற்கு உடனடியாக...

2026-11-06 17:38:07
news-image

இலங்கை - பங்களாதேஷ் இருதரப்பு உறவுகள்...

2026-11-06 18:04:38
news-image

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்...

2026-11-06 17:59:32