ருமேனியாவின் கடற்கரைக்கு அப்பால் கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ‘வைன் டிரேடர்’ என்னும் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மற்றும் வெடிப்புகளைத் தொடர்ந்து, கப்பலில் பணியாற்றிய 12 பேரில் 08 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடற்படை மற்றும் அவசரகால அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுலினா அருகே டானூப் நதியின் முகத்துவாரத்திலிருந்து கிழக்கு திசையில் 13 கடல் மைல் (24 கிலோ மீற்றர்) தூரத்தில் சான் மாலினோ கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் வியாழக்கிழமை காலையில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக கருங்கடலின் மேற்குப் பகுதியில் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகி வரும் நிலையில், அருகிலுள்ள கப்பல்களின் தகவல்படி இந்தக் கப்பல் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அருகில் உள்ள பாம்பு தீவு பகுதியில் ரஷ்ய ட்ரோன்களும் கண்டறியப்பட்டுள்ளன.
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டறியும் பணியில் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களும், இரண்டு மீட்பு படகுகளும் களமிறக்கப்பட்டுள்ளன. எனினும், அப்பகுதியில் நிலவும் மிகக் கடுமையான உயரமான அலைகள் காரணமாக மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM