2010 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்டி ரிஸல் என்ற 2 வயது சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகளை  புகைத்து வந்துள்ளான்.

தனது 2 வயதான குழந்தை பருவத்திலேயே நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகளை புகைத்து வருகிறான் என பெற்றோர்கள் குத்து மதிப்பாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு சிகரெட் பழக்கம் மட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் இருந்ததால்  உடல் பருமனால் அவதி பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து இந்தோனேசிய அரசு இதில் தலையிட்டு குழந்தைகள் புகைபிடிப்பதை எதிர்த்து ஒரு நிலைப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் மறுமலர்ச்சி நிலையம் மூலம் குறித்த சிறுவனுக்கு  தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

புகை பழக்கத்திலிருந்து குறித்த சிறுவனுக்கு தற்போது 8 வயதாகிறது. தற்போது யாராவது புகை பிடிப்பதற்கு சிகரெட் கொடுத்தால் ஐ லவ் காக் செடா  என தனக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் பெயரை குறிப்பிடுகிறான்.

சிறுவன் சிகரெட் பிடித்தால் அந்த வைத்தியரின் மனது புண் படும் என்று சிகரெட்டை பிடிப்பதில்லையாம்.

உடல் பருமனால் பாதிக்கப்பட்ட  சிறுவன்  தற்போது அதிலிருந்தும் விடுப்பட்டுள்ளார்.