ikmanJOBS 10 புதிய அம்சங்களுடன் பாரியதொரு ஆட்சேர்ப்பு மேம்படுத்தலை முன்னெடுத்துள்ளது

Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 05:41 PM
image

ikmanJOBS, இதுவரை இல்லாத தனது மிகப்பெரிய தீர்வு மேம்படுத்தல்களில் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இது, தொழில்தருநர்களுக்கான ஆட்சேர்ப்பை எளிமையாக்கவும், இலங்கை முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களின் வேலை தேடும் அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட 10 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்த மேம்படுத்தல்கள், சிறந்த தரமான விண்ணப்பங்களை ஈர்ப்பது, விண்ணப்பதாரர்களை வடிகட்டுவது, நேர்காணல்களை நிர்வகிப்பது மற்றும் திறமைசாலிகளைத் தீவிரமாகத் தேடுவது என ஆட்சேர்ப்பு நடவடிக்கை முழுவதும் இந்தத் தளத்தை வலுப்படுத்துகின்றன.

தொழில்தருநர்கள் இப்போது வெற்றிடமாகவுள்ள ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர்களை சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கக் கோரலாம். இது, தொழில்தருநர்கள் தொடக்கத்திலிருந்தே விண்ணப்பதாரரின் முழுமையான தகவல்களைப் பெற உதவுகிறது. மேலும், தொழில்தருநர்கள் வேலையொன்றுக்கான விளம்பரத்தில் ஏழு தனிப்பயனாக்கப்பட்ட வடிகட்டல் கேள்விகள் வரை சேர்த்துக் கொள்ள முடியும். இது, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, அந்தப் பணிக்குத் தொடர்புடைய முக்கியமான தகவல்களைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட விண்ணப்பக் கண்காணிப்பு அமைப்பு (Application Tracking System - ATS) மூலம், தொழில்தருநர்களின் அனுபவமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைத் தனித்தனியாக நிர்வகிப்பதற்குப் பதிலாக, ஆட்சேர்ப்பு செய்பவர்கள், விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்தல் மற்றும் நேர்காணல்கள் உள்ளிட்ட ஆட்சேர்ப்பு செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் முன்னேறும்போது, அவர்களை ஒழுங்கமைத்து கண்காணிக்க முடியும்.

விண்ணப்பதாரர்களுடனான தொடர்பாடலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய எஸ்எம்எஸ் தகவல் தொடர்பாடல் வசதிகள், நேர்காணல் தொடர்பான முக்கியத் தகவல்களை நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப தொழில்தருநர்களுக்கு இடமளிக்கின்றன. இது, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின் போது வேகமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.

தனிப்பட்ட வேலை விளம்பரங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களைத் தாண்டி, ikmanJOBS தனது விண்ணப்பதாரர் தரவுத்தளத்தை வலுப்படுத்தி, தொழில்தருநர்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சுறுசுறுப்பான விண்ணப்பதாரர் சுயவிபரங்களை அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. இது, ஆட்சேர்ப்பு செய்பவர்கள் வரும் விண்ணப்பங்களை மட்டும் சார்ந்திருப்பதை விடுத்து, பொருத்தமான விண்ணப்பதாரர்களைத் தேடுவதன் மூலம், பணியமர்த்தலில் மேலும் முனைப்பான அணுகுமுறையைக் கையாள உதவுகிறது.

இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, இணையவழியாக ஆட்சேர்ப்பு செய்யும்போது தொழில்தருநர்கள் எதிர்கொள்ளும் பல நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன - முழுமையற்ற விண்ணப்பங்களைப் பெறுதல், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கைமுறையாகச் சரிபார்த்தல், வெவ்வேறு நிலைகளில் விண்ணப்பதாரர்களைக் கண்காணித்தல் மற்றும் வெற்றிடமாக உள்ள பதவிகளுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரர்களைக் கண்டறிதல் போன்றவை இதில் அடங்கும்.

இந்த மேம்படுத்தல் வெளிநாட்டு வேலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது வெளிநாட்டு தொழில் வெற்றிடங்களை விரிவான ikmanJOBS அனுபவத்தின் ஒரு பகுதியாக மேலும் கொண்டுவருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு செயல்முறையானது, தொழில்தருநர்கள் வெற்றிடத்தின் நாட்டைக் குறிப்பிடவும், அவர்களின் SLBFE அனுமதி இலக்கத்தைச் சேர்க்கவும், வேலை விபரப் படத்தை இணைக்கவும், சுயவிபரக் கோவைச் சமர்ப்பிப்புகளைக் கோரவும் மற்றும் சரிபார்ப்புக் கேள்விகளைப் பயன்படுத்தவும் இப்போது இடமளிக்கிறது. வெளிநாட்டு ஆட்சேர்ப்பு வாடிக்கையாளர்கள், தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேடுவதற்காக விண்ணப்பதாரர் சுயவிபரத் தரவுத்தளத்தையும் அணுகலாம்.

வேலை தேடுபவர்களுக்கு, இந்த மாற்றங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் இரண்டிலும் தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட விண்ணப்ப அனுபவத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. சுயவிபர அடிப்படையிலான விண்ணப்பங்கள் மற்றும் மிகவும் பொருத்தமான சரிபார்ப்புக் கேள்விகள், செயல்முறையின் ஆரம்பத்திலேயே ஒரு பதவிக்குத் தங்களின் பொருத்தத்தை மதிப்பிடுவதற்குத் தேவையான தகவல்களை தொழில்தருநர்களுக்கு வழங்க விண்ணப்பதாரர்களுக்கு உதவும்.

இந்த 10 மேம்படுத்தல்களும் ஒன்றுசேர்ந்து ikmanJOBS வழங்கும் சேவைகளின் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கின்றன. இது, தொழில்தருநர்களின் அனுபவத்தை வெற்றிடப்பணியிடங்களை அறிவிப்பதிலிருந்து, ஆட்சேர்ப்பு செயல்முறையின் பெரும்பகுதியை ஒரே தளத்திலிருந்து நிர்வகிக்கும் மட்டத்திற்கு உயர்த்துகிறது.

ஆட்சேர்ப்பு பெருகிய முறையில் இணையவழிக்கு மாறி வருவதால், இலங்கை தொழில்தருநர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்காக நடைமுறைக்கு உகந்த டிஜிட்டல் ஆட்சேர்ப்பு கருவிகளை உருவாக்குவதில் ikmanJOBS தொடர்ந்து கவனம் செலுத்துவதை இந்த சமீபத்திய வெளியீடு பிரதிபலிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கராஜாவின் எல்லையில் ஒரு புதிய அத்தியாயம்

2026-11-02 15:03:46
news-image

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சன்ஷைன்...

2026-10-30 19:01:24
news-image

வேல்ஸின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து MBA கற்கை...

2026-10-29 19:27:54
news-image

World Mastercard உலோகக் கடனட்டையுடன் தனது...

2026-10-27 16:28:31
news-image

ikmanJOBS 10 புதிய அம்சங்களுடன் பாரியதொரு...

2026-10-15 17:41:58
news-image

RID 3220இன் ரோட்ராக்ட் அமைப்பு, சாதனை...

2026-09-25 14:45:03
news-image

'மிஸ் கிராண்ட் ஸ்ரீலங்கா 2026' உடன்...

2026-09-16 15:32:09
news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47