(க.சிவலிங்கமூர்த்தி)
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் இளைஞரின் மரண தண்டனை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதைப் போன்று, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரையின் கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திப் பொதுமன்னிப்பு வழங்க முடியும். ஜனாதிபதி அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி வியாழக்கிழமை (15) ஜனாதிபதி செயலகத்தில் கடிதமொன்றைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் இன்று கடிதமொன்றைக் கையளித்தோம். ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று கடிதத்தைக் கையளித்ததுடன், அங்கு எமது பிரதிப் பேச்சாளருடனும் கலந்துரையாடினேன். ஜனாதிபதி நிச்சயமாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவார் என்ற பெரும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் இளைஞரின் மரண தண்டனை நீக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று, இலங்கை ஜனாதிபதியாலும் அவருக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன. இவர்கள் சிறைக்குச் சென்றமை தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களால் மாத்திரமல்ல. கடந்த காலங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சிலர் சிறைக்குச் சென்றுள்ளனர்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடனேயே நாம் இங்கு வந்துள்ளோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பொதுமன்னிப்பு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும் சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர். அந்தப் பொதுமன்னிப்பு தொடர்பாக எதிர்காலத்தில் மனுவொன்றைக் கையளிக்கவுள்ளதாகச் சிலர் கூறுகின்றனர். எனவே, ஞானசார தேரருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று நான் நம்புகின்றேன்.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் எழுந்த பிரச்சினை காவி உடை தொடர்பானதாகும். தற்போது ஜனாதிபதி அதற்குத் தீர்வொன்றை வழங்கியுள்ளார்.
காவி உடையின் கௌரவத்தைப் பாதுகாப்பதும் அதனைப் பாதுகாப்பதும் முக்கியமானதாகும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரையின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உறுப்புரை முறையாகச் செயற்படுத்தப்பட்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சரும் இருக்கின்றார். ஆனால், சிறைச்சாலைகள் சட்டத்தை முறையாக வாசித்துப் புரிந்துகொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அந்தச் சட்டத்தைச் சரியாக வாசித்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் சிறைச்சாலைகள் சட்டத்தை முறையாக வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM