துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு ; இருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 03:08 PM
image

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் பெய்து வரும் கனமழை மற்றும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (14) இரவு பெய்யத் தொடங்கிய கனமழையால் வீடுகள், வணிக வளாகங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபாத்திஹ் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், சாரியர் பகுதியில் நடைபாதையில் வழுக்கி விழுந்த 34 வயது நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, நகரின் சில பகுதிகளில் 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிக அதிகளவான மழைப்பொழிவு தற்போது பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து, இன்று வியாழக்கிழமை (15) இஸ்தான்புல்லில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சில அரச ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகள் இன்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு :...

2026-11-11 16:07:22
news-image

இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மதன்...

2026-11-11 11:00:23
news-image

பிரித்தானியாவின் இரண்டாவது இராணுவத்தளத்திலிருந்தும் அமெரிக்க விமானப்படையின்...

2026-11-10 17:44:03
news-image

தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை...

2026-11-10 15:49:51
news-image

துருக்கியில் இரும்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்:...

2026-11-10 13:20:58
news-image

என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன்...

2026-11-10 12:21:57
news-image

உக்ரைன் ஜனாதிபதியுடன் மோடி பேச்சு: போருக்கு...

2026-11-10 11:10:51
news-image

பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன்...

2026-11-10 11:04:16
news-image

செனகல் கடற்பகுதியில் படகு விபத்து: உயிரிழப்பு...

2026-11-09 12:41:18
news-image

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி...

2026-11-09 12:35:15
news-image

கோல்ஃப் மைதானம் அமைக்க 430 மரங்கள்...

2026-11-09 12:26:53
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47