புதுமுக நடிகர் காட்வின் ஃபிராங்க் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒட்டாரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த நட்சத்திர இயக்குநரான வெற்றிமாறன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரா. ராமமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒட்டாரம்'. இதில் காட்வின் ஃபிராங்க், ராஜ லக்ஷ்மி, டி எஸ் கே, ரோபோ கணேசன், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். பரணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை- சுய மருத்துவம்- சுய பரிசோதனை- ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ். எஸ். ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சாமுவேல் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் இந்த படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பை எழ செய்து இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM