நடிகர் பிரியன் நடிக்கும் 'வெகுளி' படத்தின் அப்டேட்

Published By: Digital Desk 2

15 Oct, 2026 | 02:15 PM
image

பாடலாசிரியராக பிரபலமாகி நடிகராக வளர்ந்து வரும் பிரியன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வெகுளி' திரைப்படத்தில் இடம்பெற்று 'குட்டி குட்டி வெண்ணிலா' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் இஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெகுளி' திரைப்படத்தில் பிரியன், திவ்யா சந்திரன், 'பாய்ஸ்' மணிகண்டன், ஷர்மி ரவி, பூவையார், இமான் அண்ணாச்சி, சாப்ளின் பாலு, டேனியல் ஆனி போப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வி.எஸ்.நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ.ஷாமில் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரைக்கூடம் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதில் இடம்பெற்ற 'குட்டி குட்டி வெண்ணிலா எட்டி சிரிக்கும்... சுட்டி சுட்டி பெண்ணை போல் துள்ளி குதிக்கும்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் ஈரோடு சரவணன் எழுத , பின்னணி பாடகி ஜனனி நாகேந்திரன் மற்றும் பின்னணி பாடகர்கள் ஜெ. ஷாமில் மற்றும் சரோஸ் ஷாமில் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய நாட்டிய கலையான பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த பாடல் -அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54
news-image

மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக...

2026-11-05 18:11:49
news-image

'சிக்னல் அட் 11:30 'திரைப்படத்தின் இசை...

2026-11-05 17:17:59
news-image

'பேய் பிடிச்சிருக்கு ' படத்தின் முன்னோட்டம்...

2026-11-05 17:18:15
news-image

பசில் ஜோசப் – எல்.கே. அக்ஷய்...

2026-11-05 16:55:51
news-image

சசிகுமாரின் 'டெத் ரயில்வே' படத்தின் ஃபர்ஸ்ட்...

2026-11-05 17:17:38
news-image

நடிகர் வி ஜே சித்து நடிக்கும்...

2026-11-04 15:03:42