'மண்டாடி' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர மதிப்பு கொண்ட முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சூரி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சூரி,ரஜிஷா விஜயன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி - வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
'குட் பேட் அக்லி', 'டியூட்', 'மொத ராத்திரி', 'இருமுடி' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார்- ஜி கே எம் தமிழ்குமரன், அருண் விஷ்வா, இயக்குநர்கள் வெற்றி மாறன், மதிமாறன் புகழேந்தி, கீர்த்தீஸ்வரன், ஏ. ஆர். கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன் ஜவகர், கரண் அரவிந்த் குமார் உள்ளிட்ட பலர் பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
'விடுதலை', 'கருடன்', 'கொட்டு காளி', 'மாமன்', 'மண்டாடி' என தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று ரசிகர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் படைப்புகளை வழங்கி வரும் சூரி கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு , அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM