பாகிஸ்தானில் பாடசாலைக் கூரை இடிந்து விழுந்ததில் 27 சிறுவர்கள், ஆசிரியர் உயிரிழப்பு ; பலர் காயம்!

Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 01:50 PM
image

பாகிஸ்தானில் உள்ள பாடசாலையொன்றின் கூரை வியாழக்கிழமை (15) காலை இடிந்து விழுந்ததில் 27 சிறுவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததோடு, மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெஷாவர் நகரில் உள்ள இந்த இரண்டு மாடிக் கட்டடத்தின் கூரை பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்ததாகவும்  இடிபாடுகளுக்குள் சிறுவர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்டெடுக்க மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 14 பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து சில வாரங்களிலேயே இந்தப் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்துள்ளது. 

பாகிஸ்தானில் மோசமான கட்டுமானத் தரநிலைகள் மற்றும் பலவீனமான பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இதுபோன்ற கட்டட விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: அடுத்த...

2026-11-15 17:43:43
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கம் நீடிப்பு:...

2026-11-15 15:13:28
news-image

அமெரிக்கா மியாமி விமான நிலைய ஓடுபாதையில்...

2026-11-15 15:32:32
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கம்: 20,000-க்கும்...

2026-11-15 15:03:48
news-image

ஆறு நாட்கள் தனிமையில் போராடிய 17...

2026-11-15 12:16:18
news-image

பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட்...

2026-11-15 11:56:33
news-image

மியன்மாரில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது வான்வழித்...

2026-11-15 11:54:33
news-image

அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு –...

2026-11-14 15:25:39
news-image

சீனாவின் ஷென்செனில் 33ஆவது ஏபெக் பொருளாதாரத்...

2026-11-14 14:02:56
news-image

முடங்கிய அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும்...

2026-11-14 13:22:01
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 15ஆவது சோதனைப்...

2026-11-14 14:02:33
news-image

அமெரிக்காவில் பயணிகள் கப்பல் மீது சரக்குக்...

2026-11-14 11:19:34