எம்மில் சிலருக்கு திடீரென்று உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் சிவப்பு வண்ணத்திலான திட்டுகள் தோன்றக்கூடும். இவை அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் அர்ட்டிகேரியா என வகைப்படுத்தப்பட்டு, இதற்குரிய நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்முடைய தோலின் மேல் பகுதியில் உடலில் ஏற்படும் எதிர்வினையின் காரணமாக நமைச்சல், அரிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். சிலருக்கு சிவப்பு வண்ணத்தில் திட்டுகள் ஏற்பட்டு, பாரிய அசௌகரியத்தை உண்டாக்கும்.
ஒவ்வாமை அல்லது ஒவ்வாமைக்கான எதிர்வினைகள் காரணமாக எம்முடைய உடலில் ஏற்படும் தூண்டுதலால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
பொதுவாக இத்தகைய பாதிப்பு இரண்டு வாரங்களுக்குள் தானாக மறைந்து விடும். சிலருக்கு இரண்டு வாரத்திற்கும் மேலாக இத்தகைய பாதிப்பு நீடித்தால் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை சந்தித்து பரிசோதனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

சிலருக்கு ஓட்டோ இம்யுன் எதிர்வினையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாமையின் காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
சிலருக்கு சில வகையினதான மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்ளும் போது அதன் எதிர்வினையின் காரணமாகவும், சில உணவுகளை பசியாறும் போது அதனால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
எம்முடைய குருதி ஓட்டத்தில் ஹிஸ்டமின் என்ற வேதிப்பொருள் கலப்பதால் தோலில் நிறமாற்றம் மற்றும் அரிப்பு ஆகிய பாதிப்புகளை தூண்டுகிறது. சில வகையினதான வாசனை திரவியங்களை பாவிக்கும் போதும்... சில வகையினதான லோஷங்களை பூசி கொள்வதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்று காரணமாகவும் இத்தகைய தோல் பாதிப்பு உண்டாகும்.
இதற்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு, இதற்கான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருவார்கள். அத்துடன் ஒவ்வாமையை தூண்டக்கூடிய பொருட்களை தவிர்க்குமாறும் பரிந்துரைப்பார்கள்.
இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் மன அழுத்தம் அதிகமாகி பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இத்தகைய அர்ட்டிகேரியா இரவு நேரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
வைத்திய தீப்தி
தொகுப்பு அனுஷா


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM