நாட்டின் முரண்பாடுகளின் வலிகளை வெளிப்படுத்தும் ‘ரியர் ட்ரொப் நேசன்’

15 Oct, 2026 | 12:00 PM
image

க.நித்யதர்ஷனி

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாறு மற்றும் போர் பின்னணி ஆகியவற்றை கதைக்கருவாகக் கொண்டு இன்றைய இளைய சமுதாயம் இலங்கையின் வரலாற்றுச் சுவடுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுந்த ஆவணத் தொடராக ரியர் ட்ரொப் நேசன் (TEAR DROP NATION) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத் தொடரானது 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்களுடனான சந்திப்பு எண்ணற்ற கட்டுரைகள், சஞ்சிகைகள், 33 உயர்மட்ட நேர்காணல்கள், 1500க்கும் மேற்பட்ட காப்பகப் பகுதிகளை சேகரித்த உண்மைக்கதையாக திரையிடப்பட்டது. 

நான்கு பாகங்களை கொண்ட இந்த ஆவணப்படமானது கடந்த வாரம் கொழும்பு சிட்டி சென்டரில் உள்ள ஸ்கோப் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டார். மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதம பணிப்பாளர், அரசாங்க அதிகாரிகள், தூதுரக அதிகாரிகள், சிவில் சமூக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், நன்கொடை நிறுவனங்கள், கல்விமான்கள், நேர்காணல் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

குறித்த ஆவணப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பதாக உரையாற்றிய ஆவணப்படத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் சாரா கபீர் “நல்லிணக்கத்துக்கான வேலை செய்வது தலையை சுவரில் மோதுவது போல் சில நேரங்களில் தோன்றும். இருப்பினும் நாட்டின் வரலாற்றை இன்றைய சமூகத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே குறித்த ஆவணப்படமாகும்” என்றார்.

குறித்த ஆவணப்படமானது இளம் தலைமுறையினரைக் குறிவைத்து பரந்தளவில் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபாடு வன்முறை மற்றும் மோதலுக்கு அடிப்படை காரணமாக இருந்தவற்றை ஆராயும் நோக்கில் இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது. இந்த திட்டமானது வெறுமனே கடந்த காலத்தை பற்றி ஆராய்வதாக மட்டுமல்லாமல் நமது கடந்த கால வரலாறு நிகழ்காலத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதையும் எதிர்காலத்தில் எவ்வாறு நாம் அவற்றை அணுகப் போகிறோம் என்பதையும் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதாக அமைகிறது. 

இத்தொடர் காலவரிசைப்படி நான்கு அத்தியாயங்களை கொண்டதாக அமைகிறது. முரண்பாடுகளுக்கான அடித்தளம் (1930-1970), விடுதலைப்புலிகள் (1970- 1980), அமைதிக்கான போராட்டம் (1980 - பிந்தைய 1990கள்) மற்றும் சொர்க்கத்தில் போர் (1990 - 2009). இக்காலக்கட்டப் பகுதிகளில் நிகழ்ந்த அரசியல் சமூக பொருளாதார இன மத மற்றும் சாதி போன்ற தலைப்புக்களை விவரித்து ஆராய்கிறது. 

பொதுமக்களிடம் வரலாற்றை கொண்டு சேர்ப்பதும் நாட்டில் ஏற்பட்ட மோதல்கள், இனக் கலவரங்கள், போர்கள் என்பன மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் மக்களை சிந்திக்க வைப்பதற்கான  முயற்சியே இந்த ஆவணப்படத்தின் நோக்கமாகும். 

தொடரின் முதல் அத்தியாயத்தில் நாம் விதைத்த விதைகள் - சுதந்திரம் நோக்கிய மாற்றம் முதல் என்ற அத்தியாயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காலனித்துவ காலம் மற்றும் இலங்கை சுதந்திரம் அடைந்த சூழல் குறித்த சுருக்கமான அறிமுகமாக அமைகிறது. மோதலுக்கான அடிப்படை காரணங்களை விபரிப்பதோடு நாம் யார்? இலங்கையராக இருப்பதன் பொருள் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு நகர்கிறது.

தமிழர்களுக்கு எதிரான அரசியலமைப்புக்கள் முதல் வன்முறை தாக்குதல் குடியுரிமைச் சட்டம் ‘சிங்களம் மட்டும் சட்டம்’ மற்றும் அதன் திருத்தங்கள், புதிய அரசியலமைப்பு அறிமுகம், வட்டுகோட்டைத் தீர்மானம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள், அவை இளைஞர்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் மூலம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் புரட்சிகர இயக்கங்கள் எவ்வாறு தோன்றின என்பதை இந்த அத்தியாயம் கொண்டமைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54
news-image

மனிதர்களின் தலைமுடியின் பின்னணியில் உள்ள வணிக...

2026-11-05 18:11:49
news-image

'சிக்னல் அட் 11:30 'திரைப்படத்தின் இசை...

2026-11-05 17:17:59
news-image

'பேய் பிடிச்சிருக்கு ' படத்தின் முன்னோட்டம்...

2026-11-05 17:18:15
news-image

பசில் ஜோசப் – எல்.கே. அக்ஷய்...

2026-11-05 16:55:51
news-image

சசிகுமாரின் 'டெத் ரயில்வே' படத்தின் ஃபர்ஸ்ட்...

2026-11-05 17:17:38
news-image

நடிகர் வி ஜே சித்து நடிக்கும்...

2026-11-04 15:03:42