அமெரிக்காவில் இந்து வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம்: 19 வயது இளைஞர் கைது

Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 10:41 AM
image

அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் உள்ள இந்து வழிபாட்டுத் தலமொன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அங்கு இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர், இல்லினாய்ஸ் மாநிலத்தின் பலட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரோஸ் பபோராகிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உணவகம் ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, தனது துப்பாக்கிச் சூடு திட்டம் தொடர்பான எட்டு பக்க ஆவணமொன்றையும் தந்திரோபாயப் போர் உபகரணங்களின் படங்களையும் சக ஊழியர் ஒருவருக்கு அவர் அனுப்பியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வரிசை எண் இல்லாத AR ரகத் துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மெகசின்கள் மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பபோராகிஸுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விசாரணைக்கு முந்தைய பொலிஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய...

2026-11-06 17:54:18
news-image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் –...

2026-11-06 16:05:27
news-image

என்னை பதவி நீக்கம் செய்தால் ஜனநாயகக்...

2026-11-06 12:31:44
news-image

நியூசிலாந்து கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை...

2026-11-06 12:15:09
news-image

இந்தோனேசியாவில் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின்...

2026-11-05 11:55:35
news-image

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

2026-11-05 11:48:38
news-image

அமெரிக்க மேலாதிக்கத்தின் முடிவு வெகு தொலைவில்...

2026-11-05 11:11:08
news-image

ஹோர்மூஸ் நீரிணை வழியாக எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி...

2026-11-05 10:44:44
news-image

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து : ஒருவர்...

2026-11-05 10:39:23
news-image

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எதிரொலி: டெஸ்லா,...

2026-11-05 09:55:34
news-image

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை :...

2026-11-04 17:04:09
news-image

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் : ட்ரம்ப்...

2026-11-04 18:14:29