அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள 'நவி' பிள்ளைக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

Published By: Digital Desk 1

15 Oct, 2026 | 10:00 AM
image

(நமது நிருபர்)

இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள நவநீதம் 'நவி' பிள்ளைக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் உலகத் தமிழர் பேரவை, அவரது தைரியம், நேர்மை மற்றும் வாழ்நாள் சேவை என்பன எதிர்கால சந்ததியினருக்கு உண்மை, கண்ணியம் மற்றும் அனைவருக்குமான நீதி என்பவற்றை முன்னிறுத்துவதற்கு ஊக்கமளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம் 'நவி' பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நவநீதம் பிள்ளையின் வாழ்க்கையும் பணியும், அபரிமிதமான அதிகாரத்தையும் இன்னல்களையும் எதிர்கொண்டதன் பின்னரும் நீதிக்காக உறுதியாக நிற்கும் தைரியத்தை வெளிப்படுத்துகின்றன. நெல்சன் மண்டேலா மற்றும் பேராயர் டெஸ்மொன்ட் டூட்டு போன்ற நோபல் பரிசு பெற்ற மாமனிதர்களின் சகாப்தத்தில், நிறவெறி நிலவிய தென்னாபிரிக்காவில் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டப் பின்னணியில் வளர்ந்த அவர், சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதிக்கான கொள்கைகளைத் தன் சொந்த நாட்டையும் கடந்து உலகம் முழுவதும் கொண்டுசென்றார். ஒரு சட்டத்தரணியாக, நீதிபதியாக, சர்வதேச நீதிபதியாக மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக, அவர் இக்கொள்கைகளை சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்ல உதவினார்.

சர்வதேச நீதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிக ஆழமானதாகும். பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளை சர்வதேச சட்டத்தின்கீழ் குற்றங்களாக அங்கீகரிப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். அத்தகைய வன்முறைகளை மோதல்களின் தவிர்க்க முடியாத விளைவுகளாகவோ அல்லது தண்டனைகளிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பாகவே இனிக் கருதமுடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவர் பெரிதும் பங்களிப்புச் செய்தார். அவரது பணிகள் பொறுப்புக்கூறலின் அடிப்படைகளை வலுப்படுத்தியிருப்பதுடன், மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள நவநீதம் பிள்ளைக்கு எமது வாழ்த்தினைத் தெரிவிக்கும் அதேவேளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதி என்பவற்றை முன்னிறுத்தி பணிகளுக்கு அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து பங்களிப்புச் செய்வார் என்று நம்புகிறோம். அவரது தைரியம், நேர்மை மற்றும் வாழ்நாள் சேவை என்பன எதிர்கால சந்ததியினருக்கு உண்மை, கண்ணியம் மற்றும் அனைவருக்குமான நீதி என்பவற்றை முன்னிறுத்துவதற்கு ஊக்கமளிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: அடுத்த...

2026-11-15 17:43:43
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கம் நீடிப்பு:...

2026-11-15 15:13:28
news-image

அமெரிக்கா மியாமி விமான நிலைய ஓடுபாதையில்...

2026-11-15 15:32:32
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கம்: 20,000-க்கும்...

2026-11-15 15:03:48
news-image

ஆறு நாட்கள் தனிமையில் போராடிய 17...

2026-11-15 12:16:18
news-image

பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட்...

2026-11-15 11:56:33
news-image

மியன்மாரில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது வான்வழித்...

2026-11-15 11:54:33
news-image

அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு –...

2026-11-14 15:25:39
news-image

சீனாவின் ஷென்செனில் 33ஆவது ஏபெக் பொருளாதாரத்...

2026-11-14 14:02:56
news-image

முடங்கிய அமெரிக்க விமானச் சேவைகள் மீண்டும்...

2026-11-14 13:22:01
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 15ஆவது சோதனைப்...

2026-11-14 14:02:33
news-image

அமெரிக்காவில் பயணிகள் கப்பல் மீது சரக்குக்...

2026-11-14 11:19:34