ஓய்வறைகளுக்கான பணி பெண்ணிடம் தனது பிறப்பு உறுப்பை காட்டியதாக பிரபல கிரிக்கட் வீரர் கிரிஸ் கெய்ல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இச் சம்பவம் சம்பவம் 2015ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என கிரிஸ் கெய்ல் அந்த பத்திரிக்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்திருந்தார்.

கிரிஸ் கெய்லின்  ஓய்வறைக்கு அறைப் பணிகளை மேற்கொள்ள வந்த பணி பெண்ணிடம் என்ன தேடுகிறாய் என கிரிஸ் கேட்கதான் துவாயை தேடுவதாக பணி பெண் பதிலளித்துள்ளார்.

கிரிஸ் கெய்ல் தான் அணிந்திருந்த துவாயை அகற்றி தன்னிடம் பிறப்புறுப்பை காட்டியதாக பணி பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் கிறிஸ் கெய்லுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

ஆனால் ஆரம்ப வழக்குப் பதிவுகளில் பணிப் பெண் பசிக்கொடுமையால் கெய்லின் அறைக்கு சென்று சானட்விச் தேடியதாகவும், அதற்கு என்ன தேடுகிறாய்? என கெய்ல் பணிப்பெண்ணிடம் கேட்க, பணிப்பெண் சான்ட்விச் தேடுகிறேன் என குறிப்பிட, கெய்ல் தன் இடுப்பில் கட்டியிருந்த துவாயை அவிழ்த்து இதை தான் தேடுகிறாயா என தனது பிறப்புறுப்பை காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

என்.எஸ் .டபிள்யூ உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நடைபெறும் குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு

சன்ட்விச் தேடிய பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய கெய்ல்