எம்மில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் உள்ள தைரொய்ட் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் விவரிக்க இயலாத சங்கடங்களை எதிர்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது அல்லது அதற்கான பரிசோதனையை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு தீங்கற்ற அதாவது புற்று நோய் அல்லாத பாரா தைரொய்ட் அடினோமா எனப்படும் சுரப்பிகளில் ஏற்பட்டிருக்கும் நீர்க்கட்டி பாதிப்பை கண்டறிவார்கள். இதனை மருத்துவ மொழியில் சிஸ்டிக் பாராதைரொய்ட் அடினோமா என குறிப்பிட்டு அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்முடைய கழுத்துப் பகுதியில் நான்கு சிறிய அளவிலான பாரா தைரொய்ட் எனும் ஹோர்மோன் சுரப்பிகள் உள்ளன. இதில் தீங்கற்ற வகையில் திரவம் நிறைந்த அல்லது நீர் நிறைந்த பைப் போன்ற ஒரு கட்டி உண்டாகும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால்... உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். பொதுவாக இதுபோன்ற கட்டி பாதிப்புகளில் கால்சியத்தின் அளவு இயல்பான நிலையை விட கூடுதலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சோர்வு, கழுத்துப் பகுதியில் வலி, விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் திணறல்.. போன்ற அறிகுறிகள் இருந்தால், சிஸ்டிக் பாராதைரொய்ட் அடினோமா பாதிப்பு இருக்கிறது என அவதானிக்கலாம். இதனை வைத்தியர்கள் பிரத்யேக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, செஸ்டாமிபி பரிசோதனை மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிப்பார்கள். பாதிப்பின் தன்மையை அவதானித்து அவர்களுக்கு சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள். இத்தகைய தருணத்தில் எந்த வகையினதான நீர்க்கட்டி பாதிப்பு இந்த சுரப்பியில் ஏற்பட்டிருக்கிறது என்பதனையும் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
வைத்தியர் நிவேத் குமார் - தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM