நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' படத்தின் டீசர்

14 Oct, 2026 | 03:01 PM
image

நடிகர் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் த. சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தில் சரண், ஜேடி சக்கரவர்த்தி, லால், ஸ்மேகா, ராதிகா சரத்குமார், சாதிக், காளி வெங்கட், பால சரவணன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கா. வின். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் டேனியல் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் தங்க கடத்தல் தொடர்பான காட்சிகள் பரபரப்பாகவும்... விறுவிறுப்பாகவும்... எக்சன் ரசிகர்களுக்கு ஏற்ற திரை விருந்தாகவும் உருவாகி இருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55