உலக அளவில் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளமான சோனி நிறுவனம்- தமிழில் சோனி விழா எனும் பெயரில் தனியாக தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. இதன் இலச்சினை கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து உலகளவில் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு என பிரத்யேக நிகழ்ச்சிகளை வடிவமைத்து அதன் ஒளிபரப்பை எதிர்வரும் 19 ஆம் திகதி இரவு எட்டு மணி முதல் தொடங்குகிறது என அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதில் சோனி விழா நிறுவன குழுவினருடன் ரங்கராஜ் பாண்டே- சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட் - இயக்குநர் மித்ரன் ஜவகர் - நடிகைகள் திவ்யா கணேஷ், ஆண்ட்ரியா, பாடகர் பென்னி தயாள் உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் சோனி விழாவில் கிரைம் பேட்றோல்- மாஸ்டர் செஃப்- நோட்புக் 90'ஸ்- மகளிர் காவல் நிலையம்- இது நம்ம வைப்- என பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த கிளர்வோட்டங்கள் திரையிடப்பட்டன. இவை அனைத்தும் தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால்.. ரசிகர்களிடம் சிறிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சோனி விழா மற்றும் சோனி லிவ் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்தில் 'இசை புயல்' ஏ ஆர் ரஹ்மான் நடுவராக பங்குபற்றும் 'தமிழ் ஐடல்' எனும் புதிய இளம் குரலிசை கலைஞர்களுக்கான நிகழ்ச்சி பாரிய வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM