வாழைச்சேனையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்றவரும் வாக்குவாதத்தால் வாழைச்சேனையில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அங்குள்ள பஸ்தரிப்பிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் குறித்த அடிக்கலலை இனந்தெரியாத நபர்கள் அகற்றியுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் இரு சமமூகங்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.