இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது.

டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர்  மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நபர் வட்ஸ் அப் மூலம் தன்னுடன் தகாத வகையில் செய்திகளை அனுப்பியுள்ளதாக முனாஷா ஜிலானி தெரிவித்துள்ளார். குறித்த நபர் குறுந்தகவல் அனுப்பிய தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,

இது தொடர்பில் அவதானித்துள்ளேன். இது தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு அதனுடன் தொடர்புள்ள அதிகாரி யார் எனப் பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.