மத்­திய பா.ஜ.க அரசின் திட்­டங்­க­ளினால் மக்கள் படும் அவ­தி­களை  மெர்சல் திரைப்­ப­டத்தில் வெளிக்காட்­டி­ய­மையால் பா.ஜ.க. வினர் அத்­தி­ரைப்­ப­டத்­துக்கு கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்­தனர். இது தேசிய ரீதியில் பேசும் பொரு­ளாக மாறி­யது. இந்­நி­லையில் பா.ஜ.க.வின் தேசிய செய­லாளர் எச்.ராஜா விஜயின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்­பிட்டு அவ­ருக்கு மதச்­சாயம் பூசும் முயற்­சியில் ஈடு­பட்டார் . ஜோசப் விஜய் என்று கூறி மத ரீதி­யாக தாக்­குதல் நடத்­தினார்.  விஜயின் பெயர் ஜோசப் விஜய் என்று பொது­வாக யாருக்கும் தெரி­யாத நிலையில் விஜயின் வாக்­காளர் அட்டை உள்­ளிட்ட சில ஆவ­ணங்­களை தனது ட்விட்­டர் ­பக்­கத்தில் வெளியிட்டு விஜயை கிறிஸ்­துவர் என்று ராஜா விமர்­சித்தார். இதற்கு பல தரப்­பி­னரும் எதிர்ப்பு தெரி­வித்­தனர். ஆயினும் பா.ஜ.க. வி­னரின் எதிர்­மறை கருத்தே படத்தை மாபெரும்  வெற்­றி­டப்­ப­ட­மாக மாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மக்­களும், ரசி­கர்­களும் மெர்­ச­லுக்கு அமோக ஆத­ரவை வழங்கி படத்தை வெற்றி பெறச் செய்­து­விட்­டனர். இந்­நி­லையில் இதுவரை மௌன­மாக இருந்த விஜய்  பா.ஜ.க.வின­ருக்கு  பதி­லடி கொடுக்கும்  வகையில்  படம் வெற்றி பெற்­ற­தற்கு நன்றி தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டுள்ளார். இதில்  விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்றே குறிப்­பிட்­டுள்ளார். 

அந்த அறிக்­கையில் விஜய் கூறி­யி­ருப்­ப­தா­வது:

மெர்சல் படம் தீபா­வளி விருந்­தாக வெளி­யாகி மக்­களின் பாராட்­டு­க­ளுடன், நல்ல வர­வேற்பைப் பெற்று வெற்­றி­க­ர­மாக ஓடிக் கொண்­டி­ருக்­கி­றது. மெர்சல் திரைப்­ப­டத்­துக்கு சில எதிர்ப்­புகள் வந்­தன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் திரை­யு­லக நண்­பர்­க­ளான நடி­கர்கள், நடி­கைகள், இயக்­கு­நர்கள், திரை­யு­லக அமைப்­பு­க­ளான நடிகர் சங்கம், தயா­ரிப்­பா­ளர்கள் சங்கம், தேசிய அளவில் பிர­ப­ல­மான அர­சியல் தலை­வர்கள், மாநில கட்­சி­களின் தலை­வர்கள், கட்சி பிர­தி­நி­திகள், பத்­தி­ரிகை, தொலைக்­காட்சி, இணை­ய­தளம், பண்­ப­லையைச் சேர்ந்த ஊடக நண்­பர்கள், எனது நண்பர், நண்­பிகள் (ரசிகர், ரசி­கைகள்), பொதுமக்கள் அனை­வரும் எனக்கும் மெர்சல் படக் குழு­வி­ன­ருக்கும் மிகப் பெரிய ஆத­ரவு தந்­தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்­ப­டத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்­த­தற்கும், ஆத­ரவு கொடுத்­த­தற்கும் அனை­வ­ருக்கும் இத் தரு­ணத்தில் எனது நெஞ்­சார்ந்த நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

-நன்றி கலந்த வணக்­கத்­துடன்

உங்கள் விஜய்.மேலும், தன் முழுப் பெய­ரான ஜோசப் விஜய் என்ற பெய­ரி­லேயே இந்த அறிக்­கையைத் தந்­துள்ளார்.  குறித்த அறிக்கை யின் தலைப்பில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.