வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும்

Published By: Vishnu

13 Oct, 2026 | 10:56 PM
image

(செ.கவிஷனா)

வங்காள விரிகுடா கடற்பகுதியில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலை காரணமாக எதிர்வரும் நாட்டிகளில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 அதற்கமைய, புதன்கிழமை (14) மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 முதல் 150 மி.மீ வரை மிகக் கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுடன், தற்போது நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்புப் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எச்சரிக்கையானது புதன்கிழமை (14) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன பிரதேச செயலகப் பிரிவுக்கு 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் ஹாலி எல, பசறை, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன, வலஸ்முல்ல, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, தும்பனே, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, யட்டிநுவர, கேகாலை, அரநாயக்க, மாவனெல்ல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, மாத்தளை மாவட்டதின் அம்பகமுவ கோரல, ரத்தோட்டை, மாத்தளை, மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான, அத்துரலிய, பசறை, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கேத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, வெலிகாபொல, இரத்தினபுரி, இம்புல்பே, கலவான, அயகம, நிவிதிகல, குருவிட்ட ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தொடர்ச்சியான வானிலை முன்னறிவிப்புகளை அவதானமாகப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51