(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நடுநிலையான அபு தாபி ஸெய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.


கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ரஹ்மத் ஷா, அவரது சக வீரர் சிதிக்குல்லா அத்தல், பங்களாதேஷின் லிட்டன் தாஸ் ஆகியோர் சதங்கள் குவித்தனர்.
இரண்டு அணிகளாலும் 8 அரைச் சதங்கள் பெறப்பட்டது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் வீரர் ஹசன் மஹ்முத் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து அசத்தினார்.
இந்த இரண்டு அணிகளும் சம்பந்தப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டியிலேயே இரண்டு அணிகளினதும் கூட்டு எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்த போட்டியில் மொத்தமாக 1304 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.


எண்ணிக்கை சுருக்கம்
பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 346 (தன்ஸித் ஹசன் 83, ஷத்மான் இஸ்லாம் 67, லிட்டன் தாஸ் 53, மொஹம்மத் சலீம் 82 - 4 விக்., யாமின் அஹமத்ஸாய் 79 - 3 விக்., இஸமத் அலாம் 20 - 2 விக்.),
ஆப்கானிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 240 (ரஹ்மத் ஷா 105, அப்துல் மாலிக் 62, ஹசன் மஹ்முத் 55 - 5 விக்., ஈபாடொத் ஹொசெய்ன் 56 - 4 விக்.)
பங்களாதேஷ் 2ஆவது இன்: 372 - 7 விக். டிக்ளயார்ட் (லிட்டன் தாஸ் 102, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 82, முஷ்பிக்குர் ரஹிம் 81, மெஹிதி ஹசன் மிராஸ் 51 ஆ.இ., மொஹம்மத் சலீம் 69 - 2 விக்., ஸியா-உர்-றெஹ்மான் 86 - 2 விக்.)
ஆப்கானிஸ்தான் - வெற்றி இலக்கு 479 ஓட்டங்கள் - 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 346 - 8 விக். (சிதிக்குல்லா அத்தல் 111, ரஹ்மத் ஷா 51, காய்ஸ் அஹ்மத் 49 ஆ.இ., ஈபாடொத் ஹொசெய்ன் 50 - 3 விக்., மெஹிதி ஹசன் மிராஸ் 73 - 3 விக்.)
ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ் (53, 102, 8 பிடிகள்)


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM