(செ.கவிஷனா)
தலதா மாளிகை தாக்குதல் குறித்து நீண்ட காலமாக எழுதப்பட்ட செய்திகள் மற்றும் ஆதாரங்கள் பரிமாற்றப்பட்டு வந்துள்ளன. இருப்பினும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் இந்த சம்பவத்தை பற்றி பேசியதன் ஊடாக ஜே.வி.பி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ தலதா மாளிகை மீது ஜே.வி.பி 1989 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலால் தலதா மாளிகையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட சிலர் உயிரிழந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்பாகவே தலதா மாளிகையைத் தாக்கி முதல் தீவிரவாத அமைப்பு ஜே.வி.பி ஆகும். மாளிகையின் பாதுகாவலர்களிடமிருந்து துப்பாக்கிகளைக் கைப்பற்றியதும் இவர்களே ஆகும். இவ்வாறான கொலைக் குற்றங்கள் காலாவதியானவை என்பதால் இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான காலம் கடந்துவிடவில்லை. மல்வத்து மகாநாயக்கர் முன்வைத்த கருத்தின் அடிப்படையில், தலதா மாளிகை மீதான தாக்குதலை வெறும் குண்டுவெடிப்பு என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. ஏன் எனின் அதில் ஜே.வி.பி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதை மறைக்கவோ அல்லது அந்த வரலாற்றை மாற்றவோ முடியாது. வரலாற்றை அறிந்தவர்கள் இத்தகைய உண்மைகளை மறுக்க முடியாது.
அத்துடன், தற்போதைய பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகள் அடங்கிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சபாநாயகர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், சட்ட விதிமுறைகளை மீறல், அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன. அரசாங்கத்திலுள்ள யாரும் இந்தச் சபாநாயகரைப் பாதுகாத்துப் பேச முன்வராதது, இந்தச் சூழல் எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த காலத் தவறுகளை மறந்துவிட முடியாது என்பதையும், தற்போதைய அதிகாரத்திலுள்ளவர்களின் முறைகேடுகளைக் கேள்வி கேட்க வேண்டும்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM