இடுப்பு மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை

13 Oct, 2026 | 05:31 PM
image

எம்மில் சிலருக்கு குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் மைதானங்களில் விளையாடும் போது எதிர்பாராத விதமாக இடுப்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்படலாம். அத்துடன் வேறு சிலருக்கும் இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாக இடுப்பு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்திருப்பார்கள். இந்நிலையில் எம்மில் பலருக்கு இடுப்பு மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை பற்றி அறிந்திருப்போம். ஆனால் தற்போது இடுப்பு மறு சீரமைப்பு சத்திர சிகிச்சை எனும் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் எம்முடைய கால் எலும்புகளில் சிறிய அளவில் மாற்றம் செய்து, இடுப்பு மறு சீரமைப்பு சத்திர சிகிச்சை என்ற நவீன சக்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய இடுப்பு மறு சீரமைப்பு சிகிச்சை என்பது இளமையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நோயாளிகளிடம் அவதானிக்கப்படும் இடுப்பு மூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சையில் முழு இடுப்பு முட்டையும் அகற்றி, அதற்கு பதிலாக செயற்கையான மூட்டை பொருத்தும் பாரம்பரிய இடுப்பு மாற்று சத்திர சிகிச்சைக்கு பதிலாக... எம்முடைய இடுப்பு பகுதியில் உள்ள எலும்பை மறு சீரமைப்பு செய்து, அதன் மீது ஒரு உலோகத்தால் உருவாக்கப்பட்ட செயற்கையான மூட்டை பொருத்துவதே இதன் தனித்துவமாகும். இத்தகைய நவீன தொழில்நுட்பம் மூலம் எம்முடைய இயற்கையான எலும்பு அமைப்பினை பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இத்தகைய இடுப்பு மறு சீரமைப்பு சிகிச்சையின் முதன்மையான நோக்கம் இடுப்பு வலியை குறைப்பதாகும். அத்துடன் அதன் செயல்பாட்டை விரைவில் மீட்பதாகும். இதன் மூலம் இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு- குருதி ஓட்டம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள திசுக்கள் இறப்பது ஆகியவை தடுக்கப்படுகிறது.

கடுமையான இடுப்பு வலி- இடுப்பை பாவிப்பதில் அசௌகரியம்- ஆகிய அறிகுறிகள் இருந்தால்.. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும் பாரம்பரிய இடுப்பு மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு உடல்நிலை ஒத்துழைக்காதவர்களும் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். இருப்பினும் வயது மற்றும் அதன் செயல்பாட்டு நிலையை பொறுத்தே இத்தகைய சத்திர சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

வயது- எலும்புகளின் வலிமை மற்றும் தரம், உடல் எடை, தொற்று பாதிப்பு, மூட்டு குறைபாடுகள், ஒவ்வாமை.. என பல்வேறு நிலைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்த பிறகே இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் 12 வாரங்களில் நோயாளிகள் இயல்பான நிலைக்கு திரும்பினாலும்.. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்களுடைய நாளாந்த நடவடிக்கையை தொடரலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வைத்தியர் விஜய் போஸ் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷ்வானோமா எனும் நரம்பில் ஏற்படும் கட்டி...

2026-11-17 13:16:12
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-11-16 15:05:28
news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47