கருணாஸ் - வெற்றி இணைந்து மிரட்டும் 'ரேவன்'

13 Oct, 2026 | 05:30 PM
image

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிப்பில் நிகரற்றவராக திகழும் கருணாஸ் - சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நடிகர் வெற்றி-  ஆகியோர் முதன் முதலாக இணைந்திருக்கும் 'ரேவன்' திரைப்படம்- உண்மை சம்பவத்தை தழுவி கிரைம் திரில்லராக தயாராகி வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரேவன்' திரைப்படத்தில் கருணாஸ், வெற்றி, வாணி போஜன், அனுமோல், ரவீனா, விஷ்வமித்ரன், வினோத் சாகர், சரவணன், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சேது ராஜன் ராஜகோபால் - ஆர். வி. சரண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சா. சிவப்பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொன் போர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செல்லமுத்து குப்புசாமி தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய 'படுகளக் காதை' எனும் நாவலை தழுவி இப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைக்கதையில் எம்முடைய முன்னோர்களின் நிலவியல் சார்ந்த உயிரின குறியீடாக கருதப்படும் காகம் முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார் .

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை நிறைவு செய்து இந்த ஆண்டின் இறுதியில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன் - திரைப்பட விமர்சனம்

2026-11-07 16:57:51
news-image

மூக்குத்தி அம்மன் 2 - திரைப்பட...

2026-11-07 16:05:25
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் டைட்டில்...

2026-11-07 15:14:59
news-image

சாதனைகளை படைத்து வரும் தனுஷின் 'ஓம்'...

2026-11-07 14:37:07
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் பவனின்...

2026-11-07 14:39:10
news-image

நடிகர் பாரத்தின் 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின்...

2026-11-07 14:13:34
news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54