மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 05:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பெளத்த தேரர்கள் மீது கைவைத்துள்ள இந்த ஆட்சியாளர்கள் அடுத்ததாக இந்து மற்றும் இஸ்லாம் மத தலைவர்கள் மீது கைவைக்க முற்படுவார்கள்.இந்த நாட்டில் பாதாள பிக்குகள் அமைப்பை உருவாக்கிய முதலாவது அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் திங்கட்கிழமை (12) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஆரம்பமாக பெளத்த தேரரின் காவி உடையை அகற்றி, தேரர்களை அடிபணிய வைக்க திட்டமிட்டு வருகிறது. அதற்கு இந்த நாட்டு தேரர்கள் ஒருபோதும் இடமளிப்பதில்லை. அதேநேரம் பிக்கு ஒருவர் பாதுகாக்க வேண்டிய அடிப்படை அம்சங்களை  மீறி செயற்படுகின்ற சில தேரர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குக்கு எதிராக பிக்குகளுக்கான சட்டத்தை செயற்படுத்துவதற்கும் நா்டின் சட்டத்தை செயற்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால் இந்த நாட்டில் பாதாள பிக்குள் அமைப்பை உருவாக்கிய முதலாவது அரசியல் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியாகும்.இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.

மேலும் தனி நபர்களை  நோக்காகக்கொண்டு தான் ஒருபோதும் சட்டம் அமைப்பதில்லை என ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை எந்த நோக்கத்தில் கொண்டுவந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்று கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், தனி நபர்களை இலக்காகக்கொண்டதாகும்.

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்த விடயங்களுக்கும் தற்போது மேற்கொண்டுவருகின்ற விடயங்களும் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. பெளத்த தேரர்கள் மீது தற்போது கைவைத்துள்ள இவர்கள், அடுத்ததாக கோவிலில் இருக்கும் இந்து குருக்கள்மார் மற்றும் பள்ளிவாசலில் இருக்கும் மெளலவிமார்கள் மீதும் கைவைப்பதற்கு முற்படுவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03