இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் 'சிக்னல் அட் 11.30' படத்தின் டீசர்

13 Oct, 2026 | 05:26 PM
image

தமிழ் சினிமாவின் அனைத்து வகையினதான கதாபாத்திரங்களிலும் தன்னை பொருத்திக் கொண்டு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துவதில் கவனம் ஈர்த்து வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிக்னல் அட் 11:30' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11.30' திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா தரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் - குறிப்பிட்ட போக்குவரத்து நிறுத்தத்தில் ஏற்படும் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருப்பதால்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன் - திரைப்பட விமர்சனம்

2026-11-07 16:57:51
news-image

மூக்குத்தி அம்மன் 2 - திரைப்பட...

2026-11-07 16:05:25
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் டைட்டில்...

2026-11-07 15:14:59
news-image

சாதனைகளை படைத்து வரும் தனுஷின் 'ஓம்'...

2026-11-07 14:37:07
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் பவனின்...

2026-11-07 14:39:10
news-image

நடிகர் பாரத்தின் 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின்...

2026-11-07 14:13:34
news-image

தமிழ் ஹிப் ஹொப் இசைக் கலைஞர்களை...

2026-11-06 18:16:03
news-image

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் 'மக்கள் செல்வன்'...

2026-11-06 17:40:28
news-image

'தி ரா' திரைப்படத்தின் டைட்டிலுக்கான மோசன்...

2026-11-06 16:48:27
news-image

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2026-11-06 16:32:01
news-image

சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா'...

2026-11-06 16:32:16
news-image

ஆர்யா - ரவி மோகன் இணைந்து...

2026-11-06 16:32:54