மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இறுதித் தீர்மானம் - அரசாங்கம் அறிவிப்பு

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின்னரே நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்டத் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான வேலைத்திட்டம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர், அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார இலக்குகள் மற்றும் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக இது தொடர்பில் பல முக்கிய விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்துடன் தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரே, நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை, மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அரசாங்கத்தின் சொந்தப் பொருளாதார இலக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாணய நிதியத்துடனான எதிர்கால உறவு குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03