(எம்.மனோசித்ரா)
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சிறைச்சாலை ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், இதுதொடர்பான சிறைச்சாலைச் சட்ட விதிகளைத் திருத்துவதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மூன்று வருடங்களுக்கும் அதிகமான கடுமையான சிறைத்தண்டனை பெற்ற பௌத்த பிக்குகள் விவகாரத்தில், தற்போதைய சிறைச்சாலைச் சட்ட விதிகள் மற்றும் காலங்காலமான நடைமுறைகளின் அடிப்படையிலேயே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
எவ்வாறிருப்பினும் ஞானசார தேரர் விவகாரத்தில், இந்த விதிமுறைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சிறைச்சாலை கட்டளை சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்வாரத்தில் குறித்த விதிமுறைகளுக்கான திருத்தங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்.
அந்த வகையில் எதிர்காலத்தில் இதுபோன்று பௌத்த பிக்குகளுக்கு சிறைச்சாலைகளில் ஏற்படும் நிலைமைகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM