எரி­பொ­ருட்­களின் விலை­களை அதிக­ரிப் ­பது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் கோரி க்கை விடுக்­க­வில்லை என தெரி­வித்த பெற் ­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் தம்­மிக்க ரண­துங்க தமது நிறு­வ­னத்­துக்கு ஸ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் நிறு­வனம்  11 பில்­லியன் ரூபா செலுத்­த ­வேண்­டியுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

பெற்றோல், டீசல் விலை அதி­க­ரிப்­பா­னது நாட்டின் ஏனைய பொரு­ளா­தார நிலை­மை­களை கருத்­திற்­கொண்டே மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. தற்­போ­துள்ள நிலை­மையில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­ன­மா­னது நட்­டத்­தி­லேயே இயங்­கு­கின்­றது. இல­ாப­மீட்ட முடி­யாத நெருக்­க­டி­யான நிலை­மைக்கு முகங்­கொ­டுக்­கின்­ற­போதும்  பகிர்ந்­த­ளிக்கும் போது ஏற்­படும் பிரச்­சி­னைகள் கார­ண­மாக விலை­களை அதி­க­ரிக்கும் கோரிக்­கையை முன்­வைக்­க­வில்லை. 

மேலும் எதிர்­கா­லத்தில் குறித்த திணைக்­க­ளங்கள் குறித்து  பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­மா­ன­மொன்­றுக்கு வரவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை களின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணமில்லை என்றார்.