பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே வழிபாடு..!?

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 03:58 PM
image

இன்றைய சூழலில் நம்மில் பலரும் அவர்களுடைய வயதிற்கு ஏற்றாற்போல் விவரிக்க முடியாத அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலோருக்கு பணப் பற்றாக்குறை, கடன் நெருக்கடி ஆகியவை இருக்கும்.

சிலருக்கு திருமணத் தடை, நோய்களால் அவதி, விருப்பத்திற்குரிய உயர்கல்வியைத் தொடர்வதில் தடை என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெவ்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பிரத்யேக வழிபாடும் வழிமுறையும் இருப்பினும்  இவை அனைத்தும் நீங்குவதற்கு சில எளிய குறிப்புகள் உள்ளதாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் விவரித்திருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்: வெற்றிலை மாலை மற்றும் தயிர் சாதம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சனிக்கிழமைகளில் 108 வெற்றிலைகளால் மாலையை தயாரித்து, தயிர் சாதத்தை நிவேதனமாக படைத்து, அருகில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிக்குச் சென்று இதனை சாற்றி வழிபட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை மனதில் தியானித்து வெற்றிலை மாலையை சாற்றிய பிறகு, ஆஞ்சநேயரை 11 முறை 'ராம் ராம் ராம்..' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வலம் வர வேண்டும்.

இதனை தொடர்ந்து 21 நாட்கள் அல்லது 21 சனிக்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும். வெற்றிலை மாலையை சாற்றி, 11 முறை வலம் வந்து ஆஞ்சநேயரை வணங்கினால்  உங்களுடைய குறைகளை ஆஞ்சநேயர் தீர்த்து நல்லருள் புரிவார்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்