நடிகர் சுகாஸ் நடிக்கும் 'ஹைட் & சில்க்' படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 03:36 PM
image

'மண்டாடி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான தெலுங்கு நடிகர் சுகாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஹைட் & சில்க்' என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ராஜேந்திர பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹைட் & சில்க்' திரைப்படத்தில் சுகாஸ், சஞ்சனா, தணிக்கலபரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அம்ரீத் ராம்நாத் இசையமைத்திருக்கிறார்.

ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ - மிஸ்ரி லால் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்த்திகா ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், "புடவையை நெசவு செய்யும் நெசவாளர் - ஒவ்வொரு புடவையும் உருவாகும் போதே தன்னை உடுத்திக் கொள்ளும் பெண்ணை தெரிவு செய்வதாக நம்பிக்கை உண்டு என கருதுகிறார்.

அந்த நம்பிக்கையில், தான் உருவாக்கும் சேலையை உடுத்திக் கொள்ளும் பெண் எப்படி இருப்பாள்? என அவர் கற்பனை செய்கிறார்.

அந்தப் பெண்ணை காதலிக்கவும் செய்கிறார். இந்த காதல் என்ன ஆனது? என்பதை கவித்துவமாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55