டிசம்பரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'டிரெயின்'

Published By: Digital Desk 1

13 Oct, 2026 | 03:35 PM
image

'மகாராஜா' படத்தின் விமர்சன ரீதியான வெற்றியைத் தொடர்ந்து 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரெயின்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், திவ்யா சர்மா, கே. எஸ். ரவிக்குமார், வினய் ராய், சம்பத்ராஜ், பாவனா, பிரித்விராஜ், நரேன், கலையரசன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்திருக்கிறார்.

ஒரு புகையிரத பயணத்தை பின்னணியாகக் கொண்டு கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக காணொளி மற்றும் பட உருவாக்கம் தொடர்பான பிரத்யேக காணொளி ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்  இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

கலைப்புலி எஸ் தாணு - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - மிஷ்கின் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் 'டிரெயின்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும்  திரையுலக வணிகர்களிடத்திலும்  பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55