இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு – மத்திய வங்கி அறிக்கை

Published By: Digital Desk 2

13 Oct, 2026 | 03:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களில் 41.8 சதவீதம் நாட்டின் குடும்ப அலகுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 62.5 சதவீதம் வங்கிகளாலும்,எஞ்சிய 37.5 சதவீதம் வங்கிசாரா நிதி நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் குடும்ப அலகுகளுக்கு உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்கள், இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஒரு வருட காலத்தில் 25.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025 ஆண்டின் ஜூன் மாதத்தில் குடும்ப அலகுகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 14.8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 28 சதவீதம் வரை அதிகரித்த கடன் அளவு, மீண்டும் ஜூன் மாத இறுதியில் 25.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.

விலைகள் குறைவு, பொருத்தமான கடன் தகுதிகள் உயர்வு, பணவீக்க அழுத்தம் தணிவு மற்றும் இலங்கையின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் வசதிகள் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பல சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் நிதி அமைப்பு நிலையாக காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நிதிசார் முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் போதுமான மூலதனம் மற்றும் பணப்புழக்கம்  காணப்பட்டமை ஆகியவை இந்த ஸ்திரத்தன்மைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. அதேநேரம்,கடன் வரம்புகளின் கடன் சுமை அதிகரிப்பு, கடன்களுக்கான பிணையாகப் பயன்படுத்தப்படும் சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி மாற்றம், பணவீக்க அழுத்தம் ஆகியவை நிதி அமைப்பு எதிர்கொள்ளும் பிரதான உள்நாட்டு அபாயங்களாக மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

வங்கித் துறையின் செயலற்ற கடன் அளவு 11.9 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதம் வரை குறைந்துள்ளதுடன், அறிக்கையிடப்பட்டுள்ள தகவல்களின்படி செயலற்ற கடன்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் வங்கித் துறையில் காணப்பட்ட ஆபத்தான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இத்துறைகள் போலவே அபிவிருத்தித் துறையின் ஊடாகவும், வளர்ச்சியை எட்டுதல் மற்றும் தடைகளைத் தாண்டுதல் ஆகிய நோக்கங்களுடன் சமர்ப்பிக்கப்படும் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குதல், திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் அவற்றை நிர்வகித்தல் என்பன முதன்மை நோக்கமாக அமைந்துள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இத்துறை சார்ந்த பங்களிப்புகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதி உதவி வழியே, மக்கள் மற்றும் தொழிலதிபா்களுக்குப் புதிய விழிப்புணர்வையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது நிதித் துறையின் முக்கிய பொறுப்பாக மாறியுள்ளது. நிதித் துறையினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கிடைக்கும் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலைமையில்,சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கிலும்இ மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து தமது ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03