(செ.கவிஷனா)
இணைய வழி ஊடாக செய்யப்படும் குற்றச் செயல்களில் சிறுவர்கள் இழக்காகும் மற்றும் குற்றப் பின்னணியில் ஈர்க்கப்படும் போக்கு தற்போது இலங்கையில் வேகமாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (13) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் சமூக வளைத்தளங்களை மிக அதிகளவில் பயன்படுத்திய போதிலும் இணையவழியில் மறைந்துள்ள ஆபத்துக்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்பாடுகள் இணையம் வாயிலாக முன்னெடுக்கப்படுவதால் பாடசாலை வயதுடைய சிறுவர்கள் குற்றவாளிகளின் இலக்குகளாக மிக இலகுவில் மாறுகின்றனர்.
அத்துடன், பாடசாலைக் கல்வியைத் தொடராமல் விலகியிருக்கும் சிறுவர்களே இத்தகைய போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளில் விநியோகஸ்தர்களாக பயன்படுத்தப்பட்டு அதிகளவில் சுரண்டப்படும் அபாயத்துக்கு உள்ளாகிறார்கள்.
இத்தகைய பின்னணியில், குற்றச் செயல்களில் ஈடுபடுத்தபடுவதையோ அல்லது இழக்காக்கப்படுவதையோ தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பொலிஸார் முதன்மை முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பொலிஸ் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மைக் காலமாக இது குறித்து அதிகளவான முறைப்பாடுகளும் அறிக்கைகளும் தொடர்ந்தும் பதிவாகியுள்ளதால், இலங்கை பொலிஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு இணையத்தைப் பாதுகாப்பாகவும், முறையாகவும் பயன்படுத்துவது குறித்த அறிவை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM