ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை தண்டனை சட்டவிரோதமானது - முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குற்றச்சாட்டு

Published By: Digital Desk 2

13 Oct, 2026 | 01:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறைதண்டனை சட்டவிரோதமானது. சிங்கள தலைவர்களை சிறையில் அடைப்பதற்கு திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுகின்ற என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிங்கள இனத்துக்காகவும், பௌத்த மத உரிமைக்காகவும், இராணுவத்தினருக்காகவுமே குரல் கொடுத்தார்.

ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ' இராணுவத்தினரை சிறையில் அடைத்து,புலிகளை விடுதலை செய்யும் கோழைத்தனமான அரசாங்கம் இது' என்று குறிப்பிட்டார். அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் முன்னிலையில் இருந்து செயற்பட்டார்.

இராணுவத்தினரின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் பற்றியே ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.இதில் தவறு என்ன உள்ளது. ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறைதண்டனை சட்டவிரோதமானது.

சிங்கள தலைவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.இது பாரதூரமானது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51
news-image

கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியல் துறை...

2026-11-14 15:06:10