டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் டிவிஷனிலுள்ள நீரோடையிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை  தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள நீரோடையில்  மூழ்கிய இடத்திலிருந்து 20 அடி தூரத்திலேயே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டயகமவில் வசிக்கும் வீரத்திருமகன் பேபிஷாலினி தம்பதியினரின் மகள் டிலுக்சிகாவே இல்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் டயகம பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்