ஜப்பானின் பாரம்பரிய மேள வாத்தியக் கலையில் சிறந்து விளங்கும் தொழில்முறை கலைஞர்களைக் கொண்ட வடைக்கோ டைகென்-குமி (Wadaiko Daigen-gumi) குழுவினர், இலங்கையில் தங்கியிருந்த ஒக்டோபர் 6 முதல் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுமார் பலரைக் கவர்ந்துள்ளனர்.
ஜப்பானிலிருந்து வருகை தந்த இக்கலைஞர்களின் பாரம்பரிய வடைக்கோ மேள வாத்தியங்களின் பிரமிக்க வைக்கும் இசைத் தாளங்களையும், துடிப்புமிக்க இசை நிகழ்த்துகைகளையும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் ரசித்தனர். அத்துடன், கலைஞர்களுடனான நேரடி கலந்துரையாடல்களிலும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
ஜப்பானியத் தூதரகமும் குறித்த பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிகள், ஜப்பானிய பாரம்பரியக் கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்கின.
இந்நிகழ்ச்சிகளுக்கான உத்தியோகபூர்வ விமானப் போக்குவரத்துப் பங்காளராக ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஜப்பானியத் தூதரகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானின் ஒட்டா (Ota) நகரிலிருந்து ஐந்து தொழில்முறை ஜப்பானிய மேள இசைக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, டோக்கியோவிலிருந்து கொழும்புக்கான UL455 விமானத்தின் ஊடாகக் கலைஞர்கள் பயணித்ததுடன், ஜப்பானிய பாரம்பரிய தைக்கோ மேளங்கள், அவற்றுக்கான மேடைத் தாங்கிகள் மற்றும் பாரம்பரிய கோட்டோ (KOTO) இசைக்கருவி உள்ளிட்ட உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன. இவற்றில் சில பெரிதளவிலான பயணப் பொதிகளாகக் கருதப்பட்டதால், அவற்றைக் கையாள்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டன.
கலைஞர்களையும் அவர்களின் பெறுமதிமிக்க இசைக்கருவிகளையும் பாதுகாப்பாகவும் சீராகவும் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கவனமாக முன்னெடுத்தது. இதன் மூலம், ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் தொழில்முறை சேவை ஆகியவற்றுக்கு விமான நிறுவனம் வழங்கும் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டது.
நரிட்டாவிலிருந்து கொழும்புக்கான பயணத்தைத் தாண்டி, கலாசாரப் பரிமாற்றம், மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட அனுபவங்களை உருவாக்கும் பயணமாக இது அமைந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளை இணைப்பது, மக்களை நெருக்கமாக்குவது, கலாசாரங்களை எடுத்துச் செல்வது மற்றும் கதைகள் எல்லைகளைக் கடந்து பயணிக்க உதவுவது ஆகியவை ஒவ்வொரு விமானப் பயணத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன என்பதையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM