(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு குறித்து விமர்சனங்களை முன்வைக்க சகல தரப்பினருக்கும் இடமுள்ளது. சகல தரப்பின் கருத்துக்களை ஆராய்ந்தே புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். விமர்சங்களை கண்டு அஞ்சினால் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.