இடியுடன் கூடிய கடும் மழையினால் தடைப்பட்டது கலம்போ எவ்சி - சீ ஹோக்ஸ் போட்டி

Published By: Vishnu

12 Oct, 2026 | 11:09 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (12) மாலை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற கலம்போ எவ்சி.க்கும் சீ ஹோக்ஸ் கழகத்திற்கும் இடையிலான சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இப் போட்டி இடைநிறுத்தப்பட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்தன.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகுந்த விறுவிறுப்பையும் பரப்பையும் தோற்றுவித்த இந்த இரண்டு அணி களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் 5ஆவது நிமிடத்தில் செஷான் சில்வா முதலாவது கோலை போட்டு சீ ஹோக்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

தொடர்ந்து இரண்டு அணிகளும் வேகமாவும் விறுவிறுப்பாகவும் அதேவேளை சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்ததால் போட்டி இரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது கலம்போ எவ்சி வீரரும் ஈரான் நாட்டவருமான கூரோஷ் மனேஷ் வலப்புறத்திலிருந்து பரிமாறிய பந்தை 20 வயதுடைய உமர் மொஹம்மத் ஷக்கில் கோலாக்கி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.

இடைவேளை முடிந்த பின்னர் மந்தமான வெளிச்சத்தில் இரண்டாவது ஆட்ட நேர பகுதி ஆரம்பமானது. ஆட்டம் 50ஆவது நிமிடத்தைத் தொட்டபோது இடி மின்னலுடன் கடும் மழைபெய்ததால்  மத்தியஸ்தர் சசன்க மதுஷன்கவினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இப் போட்டியை எப்போது தொடர்வது என்பது குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நாளை தீர்மானிக்கும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் அன்சார் ஆசிப் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30