ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை பெண் ஒருவர் முத்தமிட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

கார்லா டி வ்ரீஸ் என்பவர் அமெரிக்க விளையாட்டு வீராங்கனை. 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்துகொண்டார். அப்போட்டியின் பிரதம விருந்தினராக ஹிட்லர் பங்கேற்றார்.

அப்போது, ஹிட்லரிடம் ‘ஒட்டோகிராப்’ வாங்கவென அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார் கார்லா. எனினும், ஹிட்லரை நெருங்கிய அவர், திடீரென அவரை முத்தமிட முயன்றார்.

இதைச் சிறிதும் விரும்பாத ஹிட்லர் கார்லாவைக் கையால் தடுத்தார். முதல் முயற்சி தோற்றபோதும் இரண்டாவது முறையாகவும் சற்று நெருங்கி ஹிட்லரை முத்தமிட முயன்றார் கார்லா. இதன்போது அவர் ஓரளவு வெற்றிபெற்றார்.

ஆனால், அதையும் தடுத்த ஹிட்லர், அன்றைய தினமே தனது பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரை பதவி நீக்கம் செய்தார்.

என்றபோதும், ஹிட்லரை முத்தமிட்ட பெண் என்ற பெருமையை கார்லா பெற்றுக்கொண்டார்.