கொரிய தன்னார்வ அமைப்பின் விசேட பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு

Published By: Vishnu

12 Oct, 2026 | 10:07 PM
image

நாட்டிற்கு சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான கொரிய தன்னார்வ அமைப்பின் தலைவர் Deokuju Jung உட்பட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் திங்கட்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர்.

இதன்போது, இலங்கையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் நலன்புரித் திட்டங்கள் மற்றும் அதற்காக இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உதவிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையிலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பரந்தளவிலான திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நாமல் உயனவின் ஸ்தாபகரும் நாமல் உயன ஆரண்ய சேனாசனாதிபதியுமான வனவாசி ராஹுல தேரர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கொரிய தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகளான Jungsun Choi, Junyoon Lim, Chaeeun Kim மற்றும் Wonwook Choi ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக்குழு தலைவன் 'அல்பா'வின் போதைப்பொருள்...

2026-11-15 18:05:42
news-image

மொனராகலை, ஹம்பேகமுவையில் கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர்...

2026-11-15 17:49:43
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன...

2026-11-15 17:44:17
news-image

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் மனைவி...

2026-11-15 17:33:46
news-image

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை...

2026-11-15 17:22:38
news-image

மிஹிந்தலை விகாரையின் மூடப்பட்ட மூன்று நுழைவாயில்களையும்...

2026-11-15 17:18:03
news-image

வலப்பனை பஸ் நிலையத்தில் விபத்து: ஓடும்...

2026-11-15 17:12:10
news-image

எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவையொட்டி பிரதி அமைச்சர்...

2026-11-15 17:07:06
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானம்...

2026-11-15 16:40:39
news-image

2027இல் புதிய பாரிய திட்டங்கள் !...

2026-11-15 16:20:51
news-image

கொழும்பு கிரீன் பாத் பகுதியில் முச்சக்கரவண்டி...

2026-11-15 16:20:01
news-image

சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ்த் தேசிய அரசியலுக்கு...

2026-11-15 16:04:21