மட்டக்களப்பில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியைக்கு நீதி கோரியும் பாடசாலை மாணவர்கள்; ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

12 Oct, 2026 | 07:42 PM
image

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரி வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (12) இடம்பெற்றது.

நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கனரக வாகனங்களின் கட்டுபாடற்ற போக்குவரத்தை நிறுத்து மனித உயிர்களை காப்பாற்று, உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காதே இப்போதே நடவடிக்கை எடு.

பாதுகாப்பற்ற போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து, உயிரை காப்பது அரசின் கடமை பாதுகாப்பை உறுதிப்படுத்து. மாணவர்கள் செல்லும் பாதையில் மரண வாகனங்கள் வேண்டாம், அதிகாரிகளே மக்களின் குரலை செவிமடுங்கள்,  மக்களின் உயிருடன் விளையாடாதே, உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி வேண்டும். சட்டவிரோத மண் அகழ்வை உடன் நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  எனும் தலைப்பிலான மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவந்திஸ்ஸ யானையின் பெறுமதி மற்றும் பிரேதப்...

2026-11-17 15:01:41
news-image

லாஃப் எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் விலை...

2026-11-17 17:48:15
news-image

2026 ஒக்டோபரில் இலங்கையின் உற்பத்தி மற்றும்...

2026-11-17 17:35:14
news-image

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுப் படியை...

2026-11-17 17:32:28
news-image

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம்...

2026-11-17 17:12:21
news-image

ஐந்து புதிய தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும்...

2026-11-17 17:28:00
news-image

சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு ;...

2026-11-17 17:13:33
news-image

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில்...

2026-11-17 16:10:43
news-image

ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித்...

2026-11-17 16:05:21
news-image

தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு...

2026-11-17 15:56:21
news-image

கனடாவில் திறன்சார் தகைமையுடைய தொழிலாளர்களுக்கு தொழில்...

2026-11-17 15:50:11
news-image

குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாளுடன்...

2026-11-17 14:55:01