நவராத்திரி மற்றும் துர்க்கா பூஜை 2026 விழாக்களின் ஒரு பகுதியாக, அதானி குழுமத்தைச் சேர்ந்த 'அதானி சீமேந்து ' புதுமையான முறையில் பிரமாண்டமாக துர்க்கா தேவிக்கு பக்திபூர்வமான கலைப்படைப்பை காணிக்கையாக செலுத்தி உள்ளது.
'ஜஹான் விஸ்வாஸ், வஹான் சக்தி' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான துர்க்கா தேவியின் வான்வழி கலை வடிவத்தை அது வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கைமூர் ஆலையிலேயே துர்கா தேவிக்கு 70 அடி உயரம், 70 அடி அகலத்தில் (4,900 சதுர அடி பரப்பளவு) 750 தொன் எடை கொண்ட 15,000 அம்புஜா சீமேந்து மற்றும் ஏசிசி சீமேந்து மூட்டைகளை பயன்படுத்தி இந்த கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
துர்க்கா அம்மனின் உருவத்தை வானில் இருந்து ட்ரோன்கள் மூலம் பார்க்கும்போது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக விரிகிறது. இந்த பிரம்மாண்டமான கலை வடிவத்தை நிறைவு செய்ய தொழிலாளர்களும் கலைஞர்களும் இடைவிடாமல் 12,600 மணி நேரம் உழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானத்தில் இருந்து பார்க்கும் போது துர்க்கா தேவியின் முகம், கிரீடம் மற்றும் 10 கரங்கள் மிகத் தெளிவாகவும் அற்புதாகவும் காட்சியளிக்கும் வகையில் இந்த கலை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதானி சீமேந்து நிறுவனம் இந்த அழகிய கலைப்படைப்பு உருவான பயணத்தையும், அதன் பிரம்மிப்பான வான்வழிகாட்சியையும் பின்னணி இசை, உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் ஒரு காணொளி தயாரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM