நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Oct, 2026 | 03:40 PM
image

அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தி, அமெரிக்காவில் தயாரான முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்ற அடையாளத்துடன் உருவாக்கி இருக்கும் 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் நடிகர்கள் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். 'நேஷ்வில்' பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் கொமடி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரை உலகத்தின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி நடிகர் நெப்போலியன் பேசுகையில், '' ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை கூட நேரில் பார்வையிடாத அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் 200 பேரை தெரிவு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.

இது கடினமான பணி என்றாலும், திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எம்முடைய வாரிசுகளின் விருப்பத்திற்கு இணங்க இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தில் பேயும் இருக்கிறது. மக்களுக்கு தேவையான மற்றொரு விடயத்தையும் சொல்லி இருக்கிறோம். அனைவரும் படமாளிகைக்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55