தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட நடிகர் ஏகனின் 'ஹைக்கூ' படத்தின் இசை

Published By: Digital Desk 2

12 Oct, 2026 | 03:13 PM
image

டிஜிட்டல் திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நடிகராக அறிமுகமாகி பிரபலமான நடிகர் ஏகன் கதையின் நாயகனாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமாகும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டார்.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தில் ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ் மோகன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் சசி, திரைப்பட விமர்சகர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் சசி பேசுகையில், '' இந்த படத்தை பார்த்து விட்டேன். மிகவும் எளிமையான கதை. இரண்டு விதமான காதலை நுட்பமாக இயக்குநர் விவரித்திருக்கிறார்.

காதலிக்கும் போது காதலியின் விருப்பத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை காதலர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் தனக்கே உரிய பாணியில் விவரித்திருப்பதால் இப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55