தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ட்ரோன்ஸ்' திரைப்படம், மனிதர்களிடையே இயல்பாக உள்ள நிறம் சார்ந்த பாகுபாட்டு அரசியலை மென்மையாக பேசுகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ராகவ் ஆர். மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ,தேவதர்ஷினி, டிராவிட் செல்வம் ,குரேசி, ஆர்.ஜே தீபக், சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் ஆர் ஹரி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி கொமடி ஜைனரிலான இந்தத் திரைப்படத்தை ஜி எம் மார்கன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி எம் மார்கன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகை அஞ்சலி நாயர் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக சிறிய அளவில் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.
இந்த திரைப்படத்தில் ஃபேண்டஸி, ஹாரர், சர்வைவல் என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கிறது. விசித்திரமான சம்பவங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெறும். பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிற அரசியல் பற்றியும் பேசி இருக்கிறோம்'' என்றார்.
வழக்கத்திற்கு மாறாக இந்தத் திரைப்படத்தில் விஞ்ஞானி, துப்பறிவாளன், தேவதை, சூனியக்காரி என வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் இந்த திரைப்படம் ஈர்க்கும் என அவதானிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM