நவம்பரில் வெளியாகும் சோசியல் திரில்லரான 'ஜெடூசி'

Published By: Digital Desk 2

12 Oct, 2026 | 02:56 PM
image

நடிகர் ஸ்ரீதர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெடூசி' திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் நடராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெடூசி' திரைப்படத்தில் ஸ்ரீதர், ஸ்வேதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வி. எஸ். நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஸ்வரன் இசையமைத்திருக்கிறார்.

பெண்களை கலாச்சார சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்கான சோசியல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அட்சயா மூவி மேக்கர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நடராஜ் ஏகாம்பரம் மற்றும் விஜயசாந்தி ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காவிரி என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இந்த பெண்ணை கலாச்சார சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் இணைக்கப்பட்டிருப்பதால் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தட்டிக் கேட்கும் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் சேதுபதியின் 'இஞ்சி வெல்லம்' படத்தின்...

2026-11-12 15:43:17
news-image

ஆங்கில புத்தாண்டு நாளில் மீண்டும் வெளியாகிறது...

2026-11-12 15:42:06
news-image

200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில்...

2026-11-12 15:35:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி...

2026-11-12 15:10:29
news-image

காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி...

2026-11-12 12:24:45
news-image

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது அனிருத் -...

2026-11-12 11:11:46
news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55